துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Estimated read time 0 min read

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் 14 பல்கலைக் கழகங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க உயர்கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், நிரந்தர துணைவேந்தர் இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் சிக்கல்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவால் பல்கலைக்கழகங்களையும், இணைப்புக் கல்லூரிகளையும் திறம்பட நிர்வகிக்க முடியாது என தெரிவித்தார்.

துணைவேந்தர் விவகாரத்தில் உயர்கல்வித்துறை செயலாளரை தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்து உத்தரவிட்டார். அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஆணையிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author