ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த 2023-இல் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இதன் இரண்டாம் பாகம், வெளியானது முதல் திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது.
Sacnilk தளத்தின் தரவுகளின்படி, 19 நாட்களின் முடிவில் இந்தப் படம் இந்தியாவில் ரூ.537.75 கோடியும், உலகளவில் ரூ.812 கோடியும் வசூலித்துத் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “19 நாட்களில் படம் ரூ.820 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது, விரைவில் ரூ.900 கோடியைத் தொடும்” எனப் படக்குழுவிற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
Every box office record has been broken and we should all celebrate the Team #Jailer2 for giving us the New Industry Hit. Over ₹820 crore already in 19 days & surely will cross ₹900 crore+ . What an achievement for Tamil Cinema! Kudos
Hearty Congratulations to Team
#ThalaivarNirandharam #SuperstarRajinikanth @rajinikanth sir @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures
Coincidentally, all Part 2’s in Telugu, Kannada & Tamil have become Huge Industry Hits
— G Dhananjheyan (@Dhananjayang) November 3, 2026
“>
தற்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய படங்கள் திரைக்கு வரவிருப்பதால், ஜெயிலர் 2 படத்தின் வசூலும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளது.






