இன்று ஒரு சவரன் என்ன விலை தெரியுமா?

Estimated read time 1 min read

அக்டோபர் மாதம் முழுவதும் பெரும்பாலும் குறைந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் தொடங்கியதிலிருந்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தொடர் சரிவால், சவரன் விலை ரூ. 75 வரை குறையலாம் என காத்திருந்த நகைப் பிரியர்களுக்கு இந்த திடீர் அதிகரிப்பு அதிர்ச்சியை அளித்து வருகிறது.

அமெரிக்க பொருளாதார சரிவு மற்றும் பணவீக்கத்தை கருத்தில்கொண்டு கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து தங்கம் விலை குறையத் தொடங்கியது. பொதுவாக இரண்டு முறைக்கு மேல் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்போது அது உலகளாவிய சந்தையில் தங்கம் விலை மீது அழுத்தத்தை கொடுக்கும். அதனால் விலை சரியும்.

ஆனால் இந்த முறை நடைபெற்ற அமெரிக்க ஃபெடரல் வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தற்போது தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது. எனினும், இந்த உயர்வு நிரந்தரமில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

தங்கம் விலை நேற்று (நவம்பர் 3) 1 கிராம ரூ.25 அதிகரித்து ரூ.12,800-க்கும், ஒரு சவரன் ரூ.200 அதிகரித்து ரூ.1,02,400-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் நேற்றும் மாற்றமின்றி ரூ.200-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 4) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.12,825-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.1,02,600-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.200-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000-க்கும் விற்பனையாகிறது

Please follow and like us:

You May Also Like

More From Author