சீன-இந்தோனேசியா அரசுத் தலைவர்களின் மனைவிகள் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பொங் லீயுவான் அம்மையார், 31வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்கவுள்ள இந்தோனேசியா அரசுத் தலைவரின் மனைவி எலியானா அம்மையாருடன் ஜூலை 27ஆம் நாள் பிற்பகல் செங்தூ நகரில் சந்திப்பு நடத்தினார்.
அப்போது, உள்ளூர் பாரம்பரிய சிறப்பான கைவினை பொருட்களையும், சீனத் தேநீர் தயாரிப்பு நிகழ்ச்சியையும் இருவரும் கண்டு இரசித்தனர்.
பொங் லீயுவான், எலியானாவுக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, இரு தரப்பும் நட்புறவை ஆழமாக்க வேண்டும் என்றும் கூறினார். செங்தூ நகரில் பயணத்தின் மூலம், சீனாவின் வரலாறு மற்றும் பண்பாட்டை மேலும் அறிந்து கொண்டு நேசித்தார் என்று எலியானா தெரிவித்தார்.

You May Also Like

More From Author