அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

Estimated read time 1 min read

சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி ஆளுநர் அர்லேகர் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், ஆவடி விமானப்படை நிலையத்தைச் சேர்ந்த தேசிய பாதுகாப்புப் படையின் 27-வது சிறப்பு ஒருங்கிணைந்த குழு வீரர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு, சிறப்பாகப் பணியாற்றிய வீரர், வீராங்கனைகளுக்குப் பதக்கங்களை வழங்கிக் கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேகர், நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பு போற்றத்தக்கது என கூறினார்.

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் எனக்கூறிய அவர், இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ராணுவப் பயிற்சி மூலம் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் வளரும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author