வரலாற்றுச் சோதனையைத் தாக்குப்பிடித்து நிற்கும் பணிச் சாதனையை உருவாக்க ஷி ச்சின்பிங் வலியுறுத்தல்

நல்ல நிர்வாகச் செயல்திறன் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவதானது ஒரு நீண்ட காலக் கடமையாகும். இது தொடர்பான கல்வியை இடைவிடாமல் வலுபடுத்த வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டிப் பொதுச்செயலாளரும், அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு நிலை கட்சி அமைப்புகள், பரந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பொது மக்களுக்காக ஆட்சி புரிந்து, அறிவியல் ரீதியில் கொள்கை தீர்மானம் செய்து, பணியில் ஊக்கத்துடன் ஈடுப்பட வேண்டும் என்றும், நடைமுறை, மக்கள் மற்றும் வரலாற்றின் சோதனையைத் தாக்குப்பிடித்து நிற்கும் பணிச் சாதனையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியைச் சேர்ந்த கட்சிக் கட்டுமானப் பணிக்கான தலைமைக் குழு 24ஆம் நாள் கூட்டம் நடத்தி, தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உத்தரவுகளை ஆழமாக கற்றுக்கொண்டுள்ளது. இதில் நீண்டக்கால பணி அமைப்புமுறையை ஆராய்ந்து, நல்ல நிர்வாகச் செயல்திறன் தொடர்பான பயிற்சி நடவடிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author