சீன-ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

Estimated read time 1 min read

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 8ஆம் நாள், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோகன் வேடெஃபுலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில்,

சீன-ஜெர்மனி ஒத்துழைப்பு, இரு நாடுகளின் சொந்தமான வளர்ச்சிக்கும் உலகளாவிய அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிப்பதற்கும் துணை புரியும். சீனாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பகுத்தறிவு மற்றும் பயன் தரும் கொள்கை மேற்கொள்வதை ஜெர்மனி விரைவுபடுத்தி, கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புத் திசையில் ஊன்றி நிற்க வேண்டும். இரு தரப்பும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மேலும் நியாயமான நீதியான உலகின் ஆட்சி முறை அமைப்புமுறையைக் கூட்டாக கட்டியமைக்க வேண்டும். ஒரே சீனா என்ற கொள்கை, இரு தரப்புறவின் முக்கிய அரசியல் அடிப்படையாகும். இதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை என்றார்.

ஜோகன் வேடெஃபுல் கூறுகையில்,

ஒரே சீனா என்ற கொள்கையில் ஜெர்மனி உறுதியாக ஊன்றி நின்று வருகிறது. இந்நிலைப்பாடு எப்போதும் மாறப்போவதில்லை. சீனாவிலுள்ள ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் சீனா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு, சீனச் சந்தையில் தொடர்ந்து வளர்ச்சி நடைபோடும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா, பேச்சுவார்த்தையின் மூலம் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்க ஜெர்மனி ஆதரவரிக்கிறது. இதற்கு ஆக்கப்பூர்வமாக ஜெர்மனி பங்காற்றும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author