சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களின் வசதிக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்காகவும் அமைக்கப்படவுள்ள ரோப் கார் திட்டத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் 2026-ஆம் ஆண்டு மண்டல பூஜை சீசனுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்வம் அமைச்சர் வி.என். வாசவன் தெரிவித்துள்ளார்.
பம்பா மலை உச்சி முதல் சன்னிதானம் அருகே உள்ள மாளிகைப்புரம் காவல்துறை குடியிருப்பு வரை சுமார் 2.7 கி.மீ. தூரத்திற்கு இந்த ரோப் கார் அமைக்கப்பட உள்ளது.
இதன் திட்ட மதிப்பு சுமார் ₹150 கோடி முதல் ₹250 கோடி வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சபரிமலையில் விரைவில் 2.7 கி.மீ. ரோப் கார் சேவை
