சௌதி அரேபிய இளவரசரும் தலைமை அமைச்சரும் முகமத் அழைப்பிற்க்கிணங்க, சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 10ஆம் நாள் பிற்பகல், அந்நாட்டின் தலைநகர் ரியாத்தை சென்றடைந்துள்ளார். சீன-சௌதி அரேபிய உயர் நிலை கூட்டுக் கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரில் அவர் பங்கெடுத்து, அந்நாட்டில் அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கியுள்ளார்.
2022ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், முதலாவது சீன-அரபு நாடுகளின் உச்சிமாநாடு மற்றும் சீன-வளைகுடா நாடுகள் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு, சௌதி அரேபியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த ஓராண்டில், இவ்விரு உச்சிமாநாடுகளின் முக்கிய சாதனைகளை இரு தரப்பும் சரியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளிலுள்ள பரிமாற்றத்தையும் ஒத்துழைப்புகளையும் நிதானமாக முன்னேற்றி வருகின்றன. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில், நெருக்கமாக தொடர்புகொண்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, சீன-சௌதி அரேபிய பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் அம்சங்களை தொடர்ந்து செழுமைப்படுத்தி வருகின்றன என்று லிச்சியாங் தெரிவித்தார்.