நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் ‘SIR’ (Special Intensive Revision – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்) நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் தொடங்குகிறது.
எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, மக்களவையில் இந்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவாதம் இன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி, மொத்தம் 10 மணி நேரம் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்கின்றனர்.
பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இந்த SIR நடவடிக்கைகளை தி.மு.க., காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
நாடாளுமன்றத்தில் ‘SIR’ விவாதம் இன்று தொடக்கம்: என்ன எதிர்பார்க்கலாம்?
