தற்போதைய சிக்கலான சர்வதேச சூழ்நிலைமையில், ஐ.நாவை முக்கியமாகக் கொண்ட சர்வதேச அமைப்புமுறையை சர்வதேசச் சமூகம் பேணிக்காக்க வேண்டும். சர்வதேச சட்டம் என்ற அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குமுறை, ஐ.நா சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாட்டு அடிப்படையிலான சர்வதேச உறவை அடிப்படை கொள்கையாக கடைபிடிக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி கெங்சுவாங் 20ஆம் நாள் தெரிவித்தார்.
80ஆவது ஐ.நா பொது பேரவையின் 6ஆவது கமிட்டி கூட்டத்தொடரில் அவர் 20ஆம் நாள் உரைநிகழ்த்தினார். ஐ.நா சாசனம் மற்றும் ஐ.நாவின் பங்குகளை வலுப்படுத்துவது குறித்து அவர் கூறுகையில்,
இவ்வாண்டு, உலகின் பாசிசவாத எதிர்ப்பு போருக்கான 80ஆவது ஆண்டு நிறைவாகும். ஐ.நா நிறுவப்பட்டுள்ள 80ஆவது ஆண்டு நிறைவாகும். வரலாற்றில் நடந்ததை நினைவில் கொண்டு, எதிர்காலத்தைத் துவக்கிவைக்கும் முக்கிய காலக்கட்டமாக இது விளங்குகிறது. 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்குகளும் தற்போதைய சர்வதேச சட்டத்தின் அடிபடையும் ஐ.நா சாசனத்தால் அமைக்கப்பட்டது என்றார்.
