2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
பருவநிலை மாற்றங்கள் குறித்து G-20 செயற்கைக்கோள் ஆய்வு செய்கிறது என்றும் 2027ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்று நாராயணன் கூறினார்.
சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளது என்றும் “விண்வெளியின் தேவைகள் அதிகரித்துள்ளதால் இஸ்ரோவுடன் புதிய நிறுவனங்கள் இணைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இஸ்ரோவுடன் இணைந்து 330 நிறுவனங்கள் செயற்கைக்கோள், டேட்டா தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் ஆராய்ச்சிகளை நிறைவு செய்த செயற்கைக்கோள்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவர திட்டம் என்றும் விண்வெளியில் குப்பைகளை குறைப்பதற்கான ஆய்வுகளை நடத்தி வருகின்றோம் என்று நாராயணன் தெரிவித்தார்.
