வங்கதேசத்தில் இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. எனவே, அரசு நிர்வாகத்தை வழிநடத்தி வரும் தற்போதைய இடைக்கால அரசில் பதவி வகிப்பவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதனால், இடைக்கால அரசியல் பதவியில் இருப்பவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகவும், ஓரங்கட்டியதாகவும் அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தான் பதவியில் இருந்து விலகப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
