சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
2019 பொது தேர்தலில் குடியுரிமைச் சட்டத்தை முன்வைத்து தான் ஆளும் பாஜக கட்சி தேர்தல் பிரச்சாரத்தை செய்தது.
இந்நிலையில், 2024 பொது தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
பொது தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிசம்பர் 11, 2019அன்று நாடாளுமன்றத்தால் CAA மசோதா இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக விவாதங்களும் போராட்டங்களும் பல காலமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குவதற்கு இந்த சட்டம் அனுமதிப்பதால் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.