2024-யின் ஹூருன் இந்தியா ரிச் லிஸ்ட் அறிக்கையின்படி, இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை, ஆசியாவின் பில்லியனர் தலைநகரமாக மாறியுள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கைப் பின்னுக்கு தள்ளியுள்ளது.
இதனால் மும்பை முதலிடத்தை பிடித்தது. முன்னதாக மும்பையில் 58 கோடீஸ்வரர்கள் இருந்தார்கள். தற்போது அது அதிகரித்து 386 ஆக உயர்ந்துள்ளது. இதில் மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது.
டெல்லி தற்போது 18 பணக்காரர்களை சேர்த்து 217 எண்ணிக்கை கொண்டுள்ளது. இதற்கிடையில் ஹைதராபாத் முன்னேற்றமடைந்து பெங்களூரை பின் தள்ளியுள்ளது.
இதனால் ஹைதராபாத் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் ஹைதராபாத்தில் 17 புதிய பணக்காரர்களை சேர்த்து 104 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரில் மொத்தம் 100 பணக்காரர்கள் இருப்பதால் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நகரங்களில் சென்னை 82, கொல்கத்தா 69, அகமதாபாத் 67, பூனே 53, சூரத் 28, குரு கிராம் 23 ஆகியவை அடங்கும்.