பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 2008-ஆம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருந்தார்.
அவர் அங்கு 17 ஆண்டுகளில் என்ன செய்தார் என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தாலும், லண்டனில் இருந்தபடியே ஸ்கைப் மற்றும் Zoom கால்கள் மூலம் வங்கதேச தேசியவாத கட்சியை (BNP) முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
கட்சித் தொண்டர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வந்தார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, தாரிக் ரஹ்மான் மீதான பல வழக்குகள் அரசியல் பழிவாங்கல் எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளதால், கட்சியை நேரில் வழிநடத்த இதுவே சரியான தருணம் என நாடு திரும்பியுள்ளார்.
17 ஆண்டு காலத்திற்கு பிறகு பங்களாதேஷ் திரும்பிய தாரிக் ரஹ்மான்; இந்தியாவிற்கு பாதிப்பா?
