அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிக்கையில், சீன-இந்திய உறவு பற்றிய தவறான கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் டிசம்பர் 25ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் இந்த அறிக்கை, சீனத் தேசிய பாதுகாப்புக் கொள்கை பற்றி திரித்து பொய்யான கருத்துக்களைக் கூறி, வேறு நாடுகளுடனான சீன உறவுகளில் பிளவுகளை ஏற்படுத்தி, அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கவாதத்தை நிலைநிறுத்துவதற்கான சாக்குபோக்கை உருவாக்கியுள்ளது. சீனா இதை உறுதியுடன் எதிர்க்கிறது என்றார்.
மேலும், சீனா, நெடுநோக்கு பார்வையிலிருந்தும் நீண்டகால கோணத்திலிருந்தும் சீன-இந்திய உறவைக் கையாண்டு வருகிறது. இந்தியாவுடன் தொடர்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்புகளை முன்னேற்றி, இரு தரப்புறவின் சீரான வளர்ச்சியை தூண்ட சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
