ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத்தின் தென்கிழக்கே 126 கிலோமீட்டர் தொலைவில், 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 125 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பைசாபாத் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

You May Also Like

More From Author