முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, லக்னோவில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்’ (தேசிய உத்வேக தளம்) என்ற பிரம்மாண்ட நினைவு வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிசம்பர் 25) திறந்து வைத்தார்.
சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகம், இந்தியாவின் ஒருமைப்பாடு, தற்சார்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழும் என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தேசிய உத்வேக தளம்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
