டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் நோய் தினமாகும். பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற தொடர்புடைய பரப்புரை நடவடிக்கையில் காச நோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்புக்கான உலக சுகாதார அமைப்பின் சிறப்புத்தூதர் பெங் லியுவான் அம்மையார் பங்கெடுத்தார்.
இதில் எய்ட்ஸ் நோய் தடுப்புப் பணியில் தங்கள் 20 ஆண்டுகால அனுபவங்களையும் புரிந்தலையும் அவர் பகிர்ந்து கொண்டார். நோய் தடுப்புக் கருத்தை பரப்புரை செய்து, மனவுறுதியுடன் கூட்டாகச் செயல்பட்டு, எய்ட்ஸ் நோய் இல்லாத உலகை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்றும் அவர் மக்களுக்கு ஊக்கமளித்தார்.
சமூகங்களில் நோய் தடுப்பு தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளிலும் பெங் லியுவான் கலந்து கொண்டு, எஸ்ட்ஸ் நோய் தொடர்பானஅறிவியல் பரவல், சுகாதார ஆலோசனை, தன்னார்வத் தொண்டர்கள் சேவை முதலிய பணிகளை ஆய்வு செய்தார்.
