தேசிய துணிகர மூலதன வழிகாட்டி நிதியைச் சீனா 26ஆம் ஆம் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியது.
மத்திய நிதியின் வழிகாட்டல் பங்களிப்புடன் உள்ளூர் அரசுகள், அரசுசார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலதனம் முதலிய பலதரப்புகளின் பங்கேற்பு அதன் மூலம் ஈர்க்கப்படும்.
மேலும், இந்த நிதியில் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஹைட்ரஜன் எரியாற்றல் சேமிப்பு உள்ளிட்ட நெடுநோக்கு வாய்ந்த புதிய தொழில்கள் மீது கவனம் செலுத்தப்படும்.
இந்நிதியின் கீழுள்ள பெய்ஜிங், டியென்ஜின் மற்றும் ஹெபெய், யாங்சி ஆற்று டெல்டா, குவாங்தொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய வளைகுடா பகுதி ஆகிய 3 பிரதேச நிதிகள் அனைத்தும் வணிகப் பதிவை நிறைவேற்றியுள்ளன.
