கடும் விலையேற்றம்; இந்த நேரத்தில் வெள்ளி வாங்குவது நல்லதா?  

Estimated read time 0 min read

இந்தியாவில் வெள்ளி விலை திங்கட்கிழமை (டிசம்பர் 29) புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் கடும் தட்டுப்பாடு மற்றும் தொழில் துறைத் தேவை அதிகரிப்பு காரணமாக, இந்த ஆண்டு வெள்ளியின் விலை தங்கம் விலையை விட மிக வேகமாக உயர்ந்துள்ளது.
உலகளாவிய சந்தையில், வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 80 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இது 83.62 டாலர் என்ற நிலையை எட்டி புதிய சாதனை படைத்தது. இந்த ஆண்டில் மட்டும் வெள்ளி சுமார் 181 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
சோலார் பேனல்கள், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு மற்றும் அமெரிக்காவின் முக்கிய கனிமங்கள் பட்டியலில் வெள்ளி சேர்க்கப்பட்டது போன்ற காரணங்களே இந்த அதிரடி உயர்வுக்குக் காரணமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author