நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யாவுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்  

இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா என இரண்டு எதிரெதிர் துருவங்களுடனும் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது.
கனவுத் திட்டமான ககன்யான் பயணத்தின் சுபான்ஷு சுக்லாவை அமெரிக்காவிலுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்தியா அனுப்பும் அதே வேளையில், தனது நிலவு ஆற்றல் திட்டத்தில் ரஷ்யாவுடன் கூட்டு சேருவதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா இப்போது ஆராய்ந்து வருகிறது.
இந்த திட்டத்தில் சீனாவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய ரஷ்யாவின் அணுசக்தி கழகத்தின் தலைவர் அலெக்சி லிகாஸ்வ் சீனா மற்றும் இந்தியா இந்த திட்டத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்று கூறியதை வைத்து இந்த தகவல் பரவி வருகிறது.

You May Also Like

More From Author