மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (ஜனவரி 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான குரேரோவில் உள்ள சான் மார்கோஸ் நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது.
இது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அகாபுல்கோவுக்கு மிக அருகாமையில் உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
மெக்சிகோவில் பயங்கரம்! 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
