இந்திய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான நிலையை எட்டியது. மாலை 4 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) 440 ஆகப் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதேபோன்ற மோசமான நிலை காணப்பட்டது.
காற்றில் நிலவும் தேக்கநிலை, அடர் மூடுபனி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வெளியேறும் புகை போன்ற காரணங்களால் இந்தத் திடீர் மாசு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM), டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் (NCR) ‘கிராப்-4’ (GRAP Stage-IV) எனப்படும் மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
மூச்சுவிடத் திணறும் டெல்லி! அபாயக் கட்டத்தைத் தாண்டிய காற்று மாசுபாடு
