சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் உறுப்பினரும் சிட்சாங்கின் அலி பகுதியிலுள்ள திபெத்தின மருத்துவமனையின் தலைவர் தஷி டன்ஜு சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறுகையில், எங்கள் சொந்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் மூலம், அடிமட்ட நிலை மருத்துவ இலட்சியம் மற்றும் திபெத்தின மருத்துவத்தின் பரவல், வளர்ச்சிக்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடர்களில் கலந்து கொண்ட பிறகு, திபெத்தின மருத்துவம் மற்றும் மருந்துகளின் வளர்ச்சியை முன்னேற்றி, திபெத்தின மருத்துவத்தின் பாதுகாப்பு மற்றும் பரவலை மேலும் முன்னேற்றுவேன் என்றார்.
ஆரோக்கியம், வளர்ச்சிக்கான மூல ஆகாரமாகும். மருத்துவத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவது மற்றும் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தாலும் தான் பிராந்தியத்தின் தொடரவல்ல வளர்ச்சியை நனாவாக்க முடியும் என்று அவர் கூறினார்.