காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் அமைதி வாரியம்! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு  

Estimated read time 1 min read

காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட “விரிவான அமைதித் திட்டத்தை” (Comprehensive Plan) முன்வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க “அமைதி வாரியம்” (Board of Peace) என்ற உயர்நிலை அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார்.
இந்தச் சர்வதேசக் குழுவில் இணையுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் டிரம்ப் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவிக்கையில், “இந்த அமைதி வாரியத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author