மத்திய பட்ஜெட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல் தமிழ்நாடு வஞ்சிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல் தமிழ்நாடு வஞ்சிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ள நிர்மலா சீதாராமன், இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியது வருத்தமளிப்பதாக கூறினார். பட்ஜெட்டில் இடம்பெற்ற விவசாய திட்டங்கள், அதிவேக ரயில் திட்டங்கள் மக்களுக்கு நன்மை அளிக்காதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், ஆர்யத்துக்கும், திராவிடத்துக்கும் போர் நடப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். முதல்வர் பேச்சு முழுக்க முழுக்க பிரிவினைவாத மனநிலை கொண்டவர்களின் எண்ணம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விஜயை பார்த்து திமுக தான் பயப்படுகிறது எனக் கூறிய நிர்மலா சீதாராமன், விஜய்யின் அரசியல் வருகை, பலமடையும் எண்டிஏ கூட்டணி ஆகியவற்றை பார்த்து திமுக பயப்படுகிறது என்றார். பயம் காரணமாக இலவசங்களை திமுக அறிவிக்கிறது எனக் கூறிய அவர், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை கலாசாரம் எப்போது இல்லாத அளவு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் எங்கே இருக்கிறது? மெல்ல அழிந்துவரும் காங்கிரஸ் தற்போது 2 பிரிவுகளாக உள்ளது. ஒருவேளை ்தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் எதுவும் நடந்துவிடப்போவது இல்லை என்றும் அவர் கூறினார்.
