படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் மழைபெய்து வருவதால், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்து மகிழ்வதோடு, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்வையிடுவது வழக்கம்.

இந்நிலையில், காற்றின் வேகம் அதிகரித்து, பலத்த மழை பெய்தது. மேலும் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதன் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author