அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, நேட்டோ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பக்கமான ட்ரூத் சோசியலில் அவர் வெளியிட்ட பதிவில், நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், போர் முடியும் வரை சீனா மீது 50% முதல் 100% வரை அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அவர் நேட்டோ நாடுகள் மற்றும் உலகிற்கான கடிதம் என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த பதிவில், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒத்த நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, அமெரிக்கா ரஷ்யா மீது முக்கியமான தடைகளை விதிக்கும் என்று தெரிவித்தார்.
சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
