கேரள அரசியலில் ஒரு அதிரடித் திருப்பமாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.ஐ(எம்) மூத்த தலைவருமான பினராயி விஜயன் இல்லம் உட்பட கேரளா முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை(ED) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட்’ நிறுவனத்திடமிருந்து, பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்குச் சொந்தமான ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் எவ்வித சேவைகளும் வழங்காமல் பல கோடி ரூபாய் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த ஊழல் வழக்கின் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் கேரள உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்த நிலையில், இன்று ரெய்டு அரங்கேறியுள்ளது.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
