சீனாவின் அக்ச்சி மாவட்டத்தில் காற்றாற்றல் மின்சாரத் திட்டப்பணி

சீனாவின் ஹுவாநெங் நிறுவனத்தின் 3 லட்சம் கிலோவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாற்றல் மின்சாரத் திட்டப்பணியைச் சேர்ந்த முதலாவது தொகுதியான மின்னாக்கிகள் அண்மையில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன.

இந்தத் திட்டப்பணி சின்ஜியாங்கின் கிசில்சு கிர்கிஸ் தன்னாட்சிச் சோவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 3700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதுவரை, சீனாவின் வடமேற்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் இயங்கப்பட்ட காற்றாற்றல் மின்சாரத் திட்டப்பணி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 6.7 மெகாவாட் உற்ப்பதித் திறன் கொண்ட 45 மின்னாக்கிகளுடன், மின்வேதியியல் திறன் சேமிப்பு நிலையம் ஒன்றும் அமைக்கப்படத் திட்டமிட்டப்பட்டுள்ளது.

இத்திட்டப்பணி பன்முகங்களிலும் நடைமுறைக்கு வருவதற்குப் பிறகு, ஆண்டுக்கு மின்னாற்றல் உற்பத்தி அளவு 61 கோடி கிலோவாட் எட்டி, 20 ஆயிரம் குடும்பங்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author