வாங்யீ-ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு மன்றக் கூட்டத்தின் செயலாளர் சந்திப்பு

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங்யீ, பிப்ரவரி முதல் நாள் பெய்ஜிங்கில் ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு அவையின் செயலாளர் ஷோயீகுவுடன் நெடுநோக்கு தொடர்பு மேற்கொண்டார்.

ரஷிய அரசுத் தலைவர் புத்தினின் கட்டளையை ஏற்று சீனாவில் பயணம் மேற்கொண்ட ஷோயீகுவுக்கு வரவேற்பு தெரிவித்த வாங்யீ, சீனாவும் ரஷியாவும், மிக பெரிய அண்டை நாடுகள் மற்றும் புதிய யுகத்தில் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளிகளாகத் திகழ்கின்றன என்று கூறினார்.

ரஷியாவுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தி, புத்தாண்டில் சீன-ரஷிய உறவின் புதிய துவக்கத்தை முன்னெடுக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

ஷோயீகு கூறுகையில், ரஷியா, சீனாவுடன் இரு நாட்டுறவின் உயர்நிலை வளர்ச்சியைப் பேணிக்காத்து, மேலும் நியாயமான பலதுருவமயமாக்க உலகத்தை அமைப்பதை முன்னேற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

இரு தரப்பினரும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

You May Also Like

More From Author