நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில், இரு அவைகளும் மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர், பிப்ரவரி 1-ம் தேதி நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் முடங்கி வந்தன. இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதனை நிரூபிக்கும் வகையில் சபாநாயகர் அறையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்றுகையிட்டு அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இவ்வளவு பரபரப்பாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

இரண்டு அவைகளும் மார்ச் ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author