சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து தலைமை அமைச்சர் பேடோங்டார்னைப் பிப்ரவரி 6ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், இவ்வாண்டு சீன-தாய்லாந்து தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டு பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை இரு தரப்பும் பயனுள்ளதாகவும் ஆழமாகவும் முன்னேற்ற வேண்டும். இரு நாட்டு மக்களுக்கு மேலும் நன்கு பலனளித்து, பிரதேசம் மற்றும் உலகத்துக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
ஒரே சீனா என்ற கொள்கையைத் தாய்லாந்து உறுதியாகப் பின்பற்றி வருகிறது. சீனாவுடன் இணைந்து பரிமாற்றம் மற்றும் தொடர்பு, பொருளாதாரம், வணிகம், வேளாண்மை முதலிய துறைகளிலுள்ள ஒத்துழைப்பை நெருக்கமாக்கி பகிரப்பட்ட அமைதி, கூட்டு செழுமையுடன் கூடிய அடுத்த 50ஆண்டுகளைக் கூட்டாகத் துவங்க விரும்புவதாக பேடோங்டார்ன் கூறினார்.