நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் திருத்தப் பணிக்கான (SIR) உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பிறப்பித்துள்ளது.
மாநில தேர்தல் அதிகாரிகளுடன் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், செப்டம்பர் 30 க்குள் இந்தப் பணிகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இந்த மெகா சீரமைப்பு பணி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திருத்தப் பணியின் முக்கிய நோக்கம், சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது ஆகும்.
குறிப்பாக வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதக் குடியேற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாடு முழுவதும் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயார்
