2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
தனது ஆவணங்களை அவர் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் நேற்று, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேலும் பலவற்றைச் செய்வேன் என்று உறுதியளித்து 6 கிமீ நீள பேரணியை நடத்தினார்.
“உன் பாசத்தின் நிழலில் 10 ஆண்டுகள் கடந்தது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை. அம்மா கங்கா என்னை அழைத்ததாக முன்பு சொன்னேன். இன்று என் தாய் கங்கா என்னைத் தத்தெடுத்து கொண்டாள்” என்று பிரதமர் மோடி இன்று உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.