ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலமாக, இரு நாடுகளுக்கிடையே சுமார் 10 முக்கிய ஒப்பந்தங்களும், 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (MoUs) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்தும் பல முக்கிய அம்சங்கள் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பிடிக்கும்.
ரஷ்ய அதிபர் புடின் இன்று, வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில் புது டெல்லியில் தரையிறங்குவார்.
இதற்காக தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்ய அதிபர் புடின் இன்று மாலை இந்தியா வருகிறார்
