சி.எம்.ஜி வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கை அமெரிக்காவில் தொடக்கம்

Estimated read time 1 min read

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த டாகோமா நகரிலுள்ள லிங்கன் இடைநிலைப் பள்ளியில் உள்ளூர் நேரப்படி 3ஆம் நாளன்று வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை, உலகளாவிய வசந்த விழா கலை நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு எனும் சிறப்புப் பரவல் நடவடிக்கை நடைபெற்றது.

இந்நடவடிக்கையைச் சீன ஊடக குழுமமும், வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கமும் அமெரிக்க-சீன இளைஞர் மாணவர் பரிமாற்றச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் கூட்டாக நடத்தின.  இதில் அடக்கம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங், அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ஷெஃபான், வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் யாங் வான்மிங் ஆகிய மூவரும் காணொளி வழியாக இதில் உரைநிகழ்த்தினர்.

2026ஆம் ஆண்டு சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை தொடர்புடைய பரவல் நடவடிக்கைகள் வெளிநாடுகளில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சீன ஊடக குழுமத்தின் தலைவர் ஷென் ஹைய்சியோங் கூறுகையில், மேலதிகமான அமெரிக்க பொது மக்கள் சீனாவின் வசந்த விழா, வசந்த விழா கலை நிகழ்ச்சி முதலியவற்றின் மூலம் சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். சீன-அமெரிக்க உறவுக்கான மேலும் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்கி, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை விரைவுபடுத்தி முன்னேற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author