“சூப்பர் நுண்ணறிவுப் பணிக் குழுவை” நிறுவியது டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் அக்டோபர் 4ஆம் நாள் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கட்டுரையில், “சூப்பர் நுண்ணறிவு பணிக் குழு” நிறுவப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கூட்டாட்சி அரசின் பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து கொண்டு, “சூப்பர் நுண்ணறிவுத் துறையில் அமெரிக்கா தொடர்ந்து உலக முன்னணியில் வகிப்பதை உத்தரவாதம் செய்வது” இப்பணிக் குழுவின் கடமையாகும் என்று கூறினார்.

அதற்கு முன்பு செப்டம்பர் 29ஆம் நாள், டிரம்ப் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டு, “செயற்கை நுண்ணறிவு” என்பதை ”சூப்பர் நுண்ணறிவாக” மாற்றி அழைத்தார். அன்று, அமெரிக்காவின் பல அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் வெள்ளை மாளிகையில் “வெள்ளை மாளிகை சூப்பர் நுண்ணறிவு உடன்படிக்கை: முன்னணிப் பொறுப்புக்கான கூட்டு வாக்குறுதியில்” கையொப்பமிட்டனர். இந்நிறுவனங்கள் முன்னேறிய செயற்கை நுண்ணறிவு மாதிரிக்கான பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று இவ்வுடன்படிக்கை கோரிக்கை விடுத்தது.

You May Also Like

More From Author