சீனா-ஏபெக் உறுப்பினர்களின் வர்த்தகம் 26.29 டிரில்லியன் யுவான்

Estimated read time 1 min read

2025ஆம் ஆண்டில் சீனாவுக்கும் ஏபெக் அமைப்பின் இதர உறுப்பினர்களுக்கும் இடையேயான வர்த்தகத் தொகை 26.29 டிரில்லியன் யுவானை எட்டியது என்றும், இது சீனாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு வர்த்தக அளவில் 57.82 விழுக்காடு வகித்தது என்றும் சீனச் சுங்கத்துறைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஆசியான் நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கூட்டாளிகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடனான சீனாவின் விரைவான வர்த்தகத்தால் இந்த வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சியானது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பின்கீழ் மேம்படுத்தப்பட்ட பிணைப்புடன், குறிப்பாக சீனா-லாவோஸ் ரயில்வே மற்றும் சீனா-ஐரோப்பா ரயில்வே எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்தின் வளர்ச்சி, கடல்வழி போக்குவரத்தின் மீதான சார்பைக் குறைத்து, வர்த்தக மீள்தன்மையை வலுப்படுத்தியுள்ளது.

தற்போது ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் வர்த்தக அளவு உலகளவில் கிட்டத்தட்ட பாதி பங்கு வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author