பாகிஸ்தான் தலைமையமைச்சர் முகமத் ஷாபாஸ் ஷாரிஃப் ஆகஸ்ட் 31ஆம் நாள், சீன ஊடக குழுமத்தின் சிறப்பு பேட்டியளித்த போது கூறுகையில்,
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவரது தலைமையில், சீனப் பொருளாதாரம், பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அவர் சீனாவின் வளர்ச்சிச் சாதனைகளை பிற நாடுகளுடன் பகிர்ந்துகொண்டு, கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, ஏழை நாடுகளின் மக்களை வறுமையிலிருந்து விடுவிக்க உதவியளித்தார். மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் நலன்களைக் கூட்டாக பகிரந்துகொள்ள அவர் ஆக்கப்பூர்வமாக முயற்சி செய்து வருவார் என்றார்.