சீன வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் பயணம் மேற்கொண்ட போது, அந்நாடுகளின் அரசியல் தலைவர்களுடன் தென் சீனக் கடல் நிலைமை பற்றி கருத்துக்களைப் பரிமாறியதோடு, சீனாவின் நிலைப்பாட்டையும் விளக்கிக் கூறினார்.
சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் பல ஆண்டுகால கூட்டு முயற்சிகளுடன், தென் சீனக் கடலின் பொது நிலைமை நிதானமாக இருப்பதோடு, தத்தமது வளர்ச்சிக்கு சீரான சூழ்நிலையை வழங்கியுள்ளது.
ஆனால் அமெரிக்கா உள்பட குறிப்பிட்ட சில சக்திகள் இக்கடற்பரப்பில் தொந்தரவுகளை ஏற்படுத்தி வருவதாக வாங் யீ குறிப்பிட்டார்.
சொந்த நிலவியல் சார் அரசியல் நெடுநோக்கிற்காக அண்மையில் அமெரிக்கா ரென்ஐ பாறை சர்ச்சையைப் பயன்படுத்தி, சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே எதிரெதிர் நிலையைத் தூண்டி, தென் சீனக் கடலின் அமைதியைச் சீர்குலைத்து வருவதாகவும், திரைக்குப் பிந்தைய தீய சக்தியின் மீது இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் விழிப்புடன் செயல்பட்டு, தென் சீனக் கடலின் அமைதியைப் பேணிக்காக்கும் உரிமையை சொந்த கைகளில் பிடிக்க வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.