பிரபல பாலிவுட் படமான ‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ புகழ் இயக்குனர் ஆதித்ய தாரின் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம், திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி (OTT) தளத்திலும் வரலாற்று சாதனையை படைத்து வருகிறது.
கடந்த ஜனவரி 30-ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 22 நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் ₹1,300 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம், தற்போது உலக அளவில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படமாக உருவெடுத்துள்ளது.
ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் Netflix தளத்தில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம்
