2026ஆம் ஆண்டுக்கான ஜொங்குவான்சுன் மன்றக் கூட்டம்

Estimated read time 1 min read

அறிவியல் புத்தாக்கம் மற்றும் தொழில் புத்தாக்கத்துடனான ஆழ்ந்த இணைப்பு என்பது 2026ஆம் ஆண்டுக்கான ஜொங்குவான்சுன் மன்றக் கூட்டத்தின் தலைப்பாகும். அண்மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 100க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1000க்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். மனிதர் உருவ இயந்திரம், குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, 6ஜி நுட்பத்தின் முன்னேற்றம் உள்ளிட்ட 560 அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் உயர் நிலையான புத்தாக்கத் திறனையும் தொழில் வலிமையையும் சீனா காட்டியுள்ளதாக சர்வதேச அறிவியல் தொழில்நுட்ப தரவுக் கமிட்டியின் சர்வதேச தரவுக் கொள்கைக் குழுவுக்கான தலைவர் ஷேரிஃப் தெரிவித்தார். பல்வகை புத்தாக்கம் மீது சீனா திறப்பு மனப்பான்மையைக் கொண்டுள்ளது. திறப்பு தான் புத்தாக்கத்தின் முக்கிய வழியாகும் என்றும் அவர் கூறினார்.

மேலும் திறந்த மேலும் உயிராற்றலுடன் கூடிய புத்தாக்கத்தைக் கொண்டுள்ள சீனா உலகத்துடன் எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

You May Also Like

More From Author