அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை அறிவித்து தமிழக அரசு

Estimated read time 0 min read

தமிழக அரசு 2026 மே 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், அங்கன்வாடி ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளது.

கடந்த காலங்களில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை இருந்தது. இதனால், அவர் கொளுத்தும் வெயிலிலும் அங்கன்வாடி மையங்களுக்கு வந்து செல்லும் இருந்து வந்தது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக, 2026ஆம் ஆண்டு மே மாதம் 31 நாட்களும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அரசாணையில் கூறியிருப்பதாவது, கோடை விடுமுறை நாட்களில் ஊட்டச்சத்து பாதிக்கப்படாமல் இருக்க முன்பருவத்தில் பயிலும் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துமாவு, விடுமுறை தொடங்குவதற்கு முன்பே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .மேலும், ஒரு குழந்தைக்கு தினமும் 50 கிராம் வீதம் சத்துமாவு வீட்டிற்கு தினமும் எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்பாடி ஊழியர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கப்படும் போது, உணவூட்டும் பணிகளை மாற்று ஏற்பாட்டுடன் மேற்கொள்ளும்போது, குழந்தை மையங்கள், அரசின் கொள்ளை முடிவின்படி ஆண்டு முழுவதும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author