சீனத் தேசிய மதப்பிரிவுத் தலைவர்களுடன் வசந்த விழா உரையாடல்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் தலைவருமான வாங்ஹுநீங் 12ஆம் நாள், நாடு முழுவதும் உள்ள மதப் பிரிவுகளின் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு நடத்தி, கூட்டாக வசந்த விழாவை வரவேற்றுக்கொண்டாடினர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் அவர்களின் சார்பில், வாங்ஹூநீங் மதத் துறையினர்கள் மற்றும் மத நம்பிக்கையாளர்களுக்கு வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மதத் திறமைசாலிகளுக்கான பயிற்சியை வலுப்படுத்தி, சீனாவில் மதங்களின் சீரான வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சீனப் பௌத்த சங்கம், சீன தாவிஸ்ட் சங்கம், இஸ்லாமியச் சங்கம், சீனக் கத்தோலிக்க தேச பக்திச் சங்கம், சீனாவில் உள்ள புராட்டஸ்டன்ட் திருச்சபையின் மூன்று-சுய தேசபக்தி இயக்கத்தின் தேசியக் குழு முதலியவற்றின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

You May Also Like

More From Author