ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவு ஆண்டில், 2ஆவது உலக போரில் தோல்வியடைந்த ஜப்பான், தனது இராணுவவாதத்தின் வெறிச்செயல் ஏற்படுத்திய குற்றங்களைத் தற்சோதனை செய்ய வேண்டும். ஆனால் ஜப்பானில் சிலர் இந்த குற்றங்களை மூடிமறைத்து, ஜப்பானின் இராணுவவாத வெறிச்செயலை உயிர்ப்பிக்க முயற்சிக்கின்றனர். சர்வதேச சமூகத்தின் வரலாற்று கருத்துகளுக்குப் புறம்பான இச்செயல், சர்வதேச ஒற்றுமையை மீறியுள்ளதோடு, உலக மற்றும் பிரதேச அமைதி மற்றும் நிதானத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியது. 2ஆவது உலக போருக்கு பிந்தைய சர்வதேச சமூக ஒழுங்கிற்கும் தீங்கு விளைவித்தது.
நிழலாக தொடரும் ஜப்பானிய இராணுவவாதத்தின் வெறிச்செயல், உண்மையான அச்சுறுத்தலாகும். தவறான பாதையில் ஜப்பான் ஊன்றி நின்றால், நியாயத்தைப் பேணிக்காக்கும் நாடுகளுக்கும் மக்களுக்கும் ஜப்பானின் வரலாற்று குற்றங்கள் குறித்து மறுமதிப்பீடு செய்யும் உரிமை உள்ளது.
