கியூபாவின் மீதான தடையை நிறுத்த வேண்டும்:சீனா

 

கியூபா அரசுத் தலைவர் டியாச் கானெல் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களையும், நிறுவனங்களையும், தடை செய்யப்பட்ட பெயர் பட்டியலில் சேர்ப்பதாக அமெரிக்க நிதித் துறை அமைச்சகம் 4ம் நாள் அறிவித்தது. அமெரிக்காவின் புதிய சுற்று தடை நடவடிக்கை, பொருளாதார ரீதியான ஆக்கிரமிப்பாகும் என்று கியூபா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கியூபா தலைவர்களைத் தடை செய்யப்பட்ட பெயர் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா, தனது மேலாதிக்கவாதத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு சீனா உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கிறது. கியூபா மக்களின் வாழும் உரிமை மற்றும் வளர்ச்சி உரிமையை மீறுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. கியூபா, தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காத்து, வெளிப்புறத் தலையீட்டை எதிர்ப்பதற்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author