ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகர் கோய்சுமி ஷின்ஜிரோ வெளியிட்ட ஆதாரமற்ற கருத்துகள், ஆத்திரமூட்டும் வகையில், 2ஆவது உலக போருக்கு பிந்தைய வரலாற்றில் அரிதானதாகவும் அபாயகரமானதாகவும் உள்ளது விளங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ஜியான் தெரிவித்தார். அணு ஆயுதங்களைக் கையாளாது, தயாரிக்காது, இறக்குமதி செய்யாது என்ற கொள்கையை மீற ஜப்பான் அரசு முயற்சி செய்கிறது. இது, 2ஆவது உலக போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கை சீர்குலைக்கும் வெளிப்படையான செயல் என்று லின்ஜியான் சுட்டிக்காட்டினார்.
அணு ஆயுதங்களுடன் தொடர்புடைய கொள்கைகள் குறித்து ஜப்பான் தடையின்றி விவாதிக்கலாம் என்று கோய்சுமி ஷின்ஜிரோ ஜூலை 17ஆம் நாள், இணைய நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்தார். இத்தவறான கருத்துகளில், ஜப்பானின் உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகம் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன.
இத்தகைய தவறான கருத்துகள் குறித்து சர்வதேச சமூகம் எச்சரிக்கையாய் இருந்து அதனை உறுதியாக எதிர்க்க வேண்டும் என்று லின்ஜியான் வலியுறுத்தினார்.
